10 வங்கிக் கடன்: 54 பில்லியன் ரூபா எங்கே ? வங்கியின் அந்தரங்க ஆவணத்தை மேசையில்
27 May,2022
இலங்கை மக்கள் வங்கியின் அந்தரங்க ஆவணம் ஒன்றை, பத்திரிகையாளர் மத்தியில் வைத்து மேசையில் போட்டார் சாணக்கியன் MP. சுமார் 10 அரசியல்வாதிகள்(முன் நாள் அமைச்சர்கள்) மக்கள் வங்கியில், பெரும் கடன்களை பெற்றுள்ளார்கள். இவை அனைத்தையும் கூட்டினால் 54 பில்லியன் ரூபா வருகிறது. முன் நாள் அமைச்சர் தயா கமகே, அர்சுனா அலோசியஸ் ஆகியோர் தலா , 3 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளார்கள். தண்ணீர் வடி கட்டும் ஆலை கட்ட, என்றும். வேறு சில தொழில் தொடங்க என்றும் வித்தியாசமாக யோசித்து இவர்கள் பெரும் தொகை கடனைப் பெற்றுள்ளார்கள். ஆனால் இதுவரை அதற்கான வட்டியைக் கூட அவர்கள் திருப்பி செலுத்தவில்லை. அப்படி என்றால் முதலை எவ்வாறு கட்டுவார்கள் ? என்று சாணக்கியன் கேட்ட கேள்வி, சிங்கள மக்களுக்கு இடையே தற்போது தீ யாக பரவ ஆரம்பித்துள்ளது.
இவ்வாறு அரசியல்வாதிகளால் வங்கியில் பெறப்பட்ட கடன் மட்டும் 54 பில்லியன் ரூபா என்று கூறியுள்ளார் சாணக்கியன் MPஸ. ராஜபக்ஷர்கள் சீனாவுக்கு நாட்டை விற்க்க. இவர்கள் தங்கள் பங்கிற்க்கு மக்களின் பணத்தை வங்கிக் கடனாக பெற்று ஏமாற்றியுள்ளார்கள்