வரலாற்றில் முதல்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தென்னிலங்கையில் தமிழர்களுடன் இணைந்த சிங்கள மக்கள்!
18 May,2022
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்களத்தில் இடம்பெறுகின்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழர்களுடன் சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர்.
அந்த வகையில், இலங்கை வரலாற்றில் முதல் முறையாக தென்னிலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நினைவேந்தல் கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கமவில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
வரலாற்றில் முதல்முறையாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தென்னிலங்கையில் தமிழர்களுடன் இணைந்த சிங்கள மக்கள்!
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் ஆத்ம சாந்தி வேண்டியும் அவர்களின் உயிரிழப்பிற்கு நீதி கோரியும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு, வருடாவருடம் நினைவேந்தலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருப்பினும் கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பிலேயே இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.