இந்திய புலனாய்வின் 'இலங்கை கரிசனை' - தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வெளியிட்ட தகவல்
17 May,2022
அரசாங்கத்தை காப்பாற்றும் வகையிலேயே இந்திய புலனாய்வு துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.
இந்திய உளவுத் துறையின் இந்தச் செய்தியினால் முன்னாள் போராளிகள் மீண்டும் அச்ச நிலையை எதிர்நோக்கியுள்ளதாக திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“மே -18 இல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று விடுதலைப் புலிகள் தாக்குதலை நடாத்தவுள்ளனர் என்ற செய்தி தமிழ் மக்களையும், புனர்வாழ்வாளிக்கப்பட்ட போராளிகளையும் பாதித்துள்ளதுடன் மன வேதனையளிக்கிறது.
இந்திய புலனாய்வின்
இவ்வாறான உண்மைக்கு புறம்பான செய்தி ஊடாக கொழும்பில் அமையப் பெற்றுள்ள கோட்டா கோ கம போராட்ட பூமியை கலைக்க மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டு பண்ண இந்திய புலனாய்வாளர்கள் இலங்கை புலனாய்வாளர்களுக்கு செய்தி விடுத்திருக்கிறார்கள்.
2009 யுத்தத்தின் போது மஹிந்த அரசாங்கத்துக்கு இனப்படுகொலைக்காகவும் சகல விதமான ஆயுதங்களையும் ஆயுத போராட்டங்களையும் உருவாக்கி கொடுத்ததும் உதவி ஒத்தாசை புரிந்ததும் இந்திய அரசாங்கமே.
இலங்கையில் ஆயுதக் குழுக்களை உருவாக்கவும், மீண்டும் தமிழர்கள் மீது வன்முறைகளை திணிப்பதற்காகவும் செயற்படும் இந்திய அரசின் சதித் திட்டமாக மாறியுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 30 வருடங்களின் பின் சமூகத்துடன் புனர்வாழ்வழிக்கப்பட்டு இணைந்து வாழ்கின்ற நேரத்தில் பல துன்பங்களை நாம் அனுபவிக்கிறோம். இவ்வாறாக இருக்கும் போது மோதல்களை, வன்முறையை தூண்டும் செயற்பாடு வேதனையளிக்கிறது. ஜனநாயக ரீதியான அரசாங்கத்தை எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய பிரதமர் இந்த நாட்டில் இடம் பெறும் பொருளாதார தடையை நீக்க வேண்டும். 2/3 பெரும்பான்மை இன்றி பிரதமரது நியமனம் உள்ளது. எதிர்வரும் காலங்களில் பெரும்பான்மையை நிரூபிக்க சில அரசியல் எம். பிக்கள் விலை போகலாம். அவ்வாறின்றி மக்களுக்காக செயற்படுங்கள்.
இந்திய அரசுக்கு ஆயுதப் போராட்டம் தேவையாகவுள்ளது. ஏனென்றால் சீனா தற்போது இங்கு காலடி எடுத்து வைத்துள்ளது. சர்வதேச போர் குற்ற விசாரனையை இலங்கையை விடவும் இந்தியாவுக்கே எடுக்க வேண்டும்.
இந்திய புலனாய்வின்
புலம் பெயர் தமிழர்கள் இணைந்து விடுதலை புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக இட்டுக் கட்டப்பட்ட செய்தியை இந்தியா எம் மீது அரசியல் இலாபத்திற்காக திணிக்கிறது” என்றார்.