வன்முறையில் ஈடுபட்டதாக திரிகோணமலையில் 15 பேர் கைது
17 May,2022
இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி போராட்டம் நடந்து வருகிறது. போராட்டகாரர்கள் மீது முன்னாள் பிரதமர் மகிந்தராஜ பக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு கலவரம் ஏற்பட்டது.
அப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது. திரிகோணமலை எம்.பி. கபில அதுக்கோரளவின் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்க மாவட்ட செயலாளர் கூறும் போது ,திரிகோணமலையில் நடைபெற்ற அரசுக்கு எதிரான அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது சர்வாதிகாரத்தை வெளிபடுத்துவதாக உள்ளது.நாட்டில் ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும் என இளைஞர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சமயத்தில் இதுபோன்ற கைது நடவடிக்கை வன்மை யாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்து உள்ளார்