இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! பலப்படுத்தப்பட்ட இந்திய கடலோரக் காவல்
12 May,2022
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கில் இந்தியக் கடலோரக் காவல்படையினரால் கடலோர காவல் நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக [கிரப் ஓவர்] கப்பல் என்று சொல்லப்படும் கடலிலும் தரையிலும் செல்லக்கூடிய கப்பல் பயன்படுத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பலர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இன்று வரை புகலிடம் கோரி சென்ற மக்களுக்கான புகலிட அனுமதி வழங்கப்படாமையால் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கையை விரித்த பாதுகாப்பு தரப்பு - கோட்டாபயவுக்கு அச்ச நிலை
ஒரு சம்பவம் இடம்பெற முன்னர் அதனைத் தடுத்து நிறுத்துவது தான் புலனாய்வு பிரிவினரின் கடமை. ஆனால், இலங்கையில் நடக்கும் சம்பவங்களை பார்த்தால் புலனாய்வு பிரிவு முற்றுமுழுதாக செயலிழந்து போயிருப்பதாக தான் தெரிகிறது.
ஆனால் மறுபகுதியில் போராட்டக்காரர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக இருக்கிறது என பிரித்தானியாவிலிருக்கும் இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரங்களை முன்கூட்டியே அறிந்து அதற்குரிய வியூகங்களை வகுக்க வேண்டியது புலனாய்வுத்துறையின் கடமை. ஒரு சம்பவம் இடம்பெற்ற பின்னர் விசாரணை செய்வது காவல்துறையினரின் கடமை என அவர் கூறினார்.