தமிழக அரசின் உதவிக்கு கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு!
01 May,2022
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு தமிழக அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
40,000 தொன் அரிசி மற்றும் 500 தொன் பால்மா என்வற்றை இலங்கைக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள தமிழக அரசு , இதற்காக அனுமதியைக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே சுமந்திரன் இதற்கு நன்றி தெரிவிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து அனைத்து இலங்கையர்க்கும் உதவி பொருட்கள் வழங்க முன்வந்த முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான நன்றிகள்.
'பகைவருக்கும் அருள்வாய் நன் நெஞ்சே என வாழ்பவர்கள் இலங்கை தமிழர்கள்' என்று தமிழக முதலமைச்சரின் உரையை சுட்டிக்காட்டி சுமந்திரன் டுவிட்டர் பதிவை செய்துள்ளார்