“வடக்கு கிழக்கை பணம் கொடுத்து வாங்குவதற்கும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்.
21 Apr,2022
தமிழர்களை புறக்கணித்ததால்தான் இலங்கைக்கு இந்த பிரச்னை... முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் காட்டம்
மக்கள் மீது இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலமாக ஆட்சிக்கு வந்தது இந்த அரசாங்கம். ஆனால் தற்போது அந்த இனவாதத்தல் அவர்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.மக்கள் மீது இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலமாக ஆட்சிக்கு வந்தது இந்த அரசாங்கம். ஆனால் தற்போது அந்த இனவாதத்தல் அவர்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலமாக ஆட்சிக்கு வந்தது இந்த அரசாங்கம். ஆனால் தற்போது அந்த இனவாதத்தல் அவர்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை புறக்கணித்ததால்தான் இலங்கை அரசுக்கு இந்த பிரச்னை வந்துள்ளது என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவருமான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்ணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சி.வி.விக்ணேஸ்வரன் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் கூறியதாவது, “வடக்கு கிழக்கை பணம் கொடுத்து வாங்குவதற்கும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்.
சிறுபான்மையினருக்கு அநீதி இழைத்ததன் காரணம் தான் தற்போதைய அரசாங்கம் அழிவின் விளிம்பில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அதிகார பரவல் முறையிலான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அது ஒன்றிணைந்த வடகிழக்கில் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் பிரத்தியேக அ்திகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.
மக்கள் மீது இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலமாக ஆட்சிக்கு வந்தது இந்த அரசாங்கம். ஆனால் தற்போது அந்த இனவாதத்தல் அவர்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது.
அன்று ஈழம் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு இயற்கை விவசாயத்தை இல்லாதொழிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். இலங்கையின் இன்றைய நிலைக்கு 30 ஆண்டு கால போர் தான் காரணம். தமிழ் மக்களையும் முஸ்லிம்களையும் புறக்கணித்ததால் தான் இந்த அரசாங்கம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.