இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்திப்பதற்காக தூதுக்குழு ஜூலை 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புது தில்லிக்கு செல்ல உள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் என்ன நடந்தது என்பதை ‘சில காரணங்களால்’ அப்போது குறிப்பிடவில்லை.
6ஆம் திகதி புறப்பட்டு 7ஆம் திகதி புதுடெல்லியில் நடைபெறவுள்ள கூட்டங்களுக்கு தயாராகவுள்ளதாக இந்தியத் தூதரகம் கடந்த 1ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அறிவித்தது.
தூதரகம் இத்தகவலை இரா. சம்பந்தனுக்கும் அன்றைய தினம் கூட்டமைப்பின் 3 கட்சித் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
சம்பந்தன் அன்றிரவு எம்.ஏ.சுமந்திரனிடம் கூறியதுடன் தனது கடவுச்சீட்டு காலாவதியாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
கடவுச்சீட்டை வாங்கிய சுமந்திரன், ராஜபக்சவின் மூத்தவரான சமல் ராஜபக்ஷவை சந்தித்து தனது இந்தியப் பயணம் பற்றிக் குறிப்பிட்டு, திரு.ராஜபக்ஷவின் கடவுச்சீட்டை உடனடியாகப் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அன்று இரவு எம்.ஏ.சுமந்திரனை அழைத்த இரா.சம்பந்தன், தனது கடவுச்சீட்டு காலாவதியாகி விட்டது என கூறினார். அந்த கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு சென்ற சுமந்திரன், ராஜபக்சக்களில் மூத்தவரான சமல் ராஜபக்சவை சந்தித்து, இந்திய பயணத்தை பற்றி குறிப்பிட்டு, இரா.சம்பந்தனின் கடவுச்சீட்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டுமென்றார்.
எம்.ஏ.சுமந்திரனிற்கும், ராஜபக்சக்களிற்குமுள்ள நெருக்கம் பற்றி அவ்வப்போது அரசல்புரசலாக செய்திகள் வருவதுண்டு. அப்படியொன்றாக இதையும் கடந்து செல்லலாம். இரவோடு இரவாக காரியம் முடிந்து, மறுநாள் காலையில் கடவுச்சீட்டு கையளிக்கப்பட்டு விட்டது. சம்பந்தனின் கடவுச்சீட்டு பிரச்சனை சுமுகமாக தீர்ந்ததும், இரா.சம்பந்தன் அடுத்த ஆயுதத்தை கையிலெடுத்தார்.
தன்னால் தனியாக வர முடியாது, உதவிக்கு ஒருவர் தேவை. அதனால் மகளையும் அழைத்து செல்ல வேண்டுமென. அதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை, யாருடனும் ஆலோசிக்காமல், இந்திய தூதரை தொடர்பு கொண்டு, தமக்கு வேறொரு திகதியை ஒதுக்குமாறு கேட்டிருந்தார்.
அதற்கு அவர் சொன்ன காரணம்தான் சுவாரஸ்யானது. ‘மகளின் துணையுடனே பயணம் செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் மகளின் கடவுச்சீட்டு தொலைந்து விட்டது’ என்பதே அவர் கூறிய பிரதான காரணம். மற்றைய இரண்டு காரணங்கள்- மாவை சேனாதிராசாவின் மகனின் திருமணத்தினால் அவர் கலந்து கொள்ள முடியாது, வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்பவை. இந்த மூன்றும் ‘பேய்க்காட்டல்’ காரணங்கள் என்பது இந்தியாவிற்கும் புரிந்தது.
இரவோடு இரவாக கடவுச்சீட்டை புதுப்பிக்கும் வசதியுள்ளவர்கள், தொலைந்த கடவுச்சீட்டை பெற முடியாதா என்பது இந்தியாவிற்கும் தெரிந்திருக்கும். அதைவிட முக்கியமானது. மாவை சேனாதிராசாவும் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒத்திவைத்தாராம்.
அதை சில யாழ்ப்பாண பத்திரிகையாளர்களும் நம்பி எழுதியிருந்தனர். மாவை சேனாதிராசா எம்.பியாக கூடாதென சதி நடந்த போது, அது தெரிந்தும், சதிக்கு துணை போன சம்பந்தன், மாவையையும் அழைத்துப் போக வேண்டுமென்ற உயர்ந்த மனநிலையில், சம்பந்தன் அந்த காரணத்தை சொன்னார் என நம்பியிருக்காது.
ஒரு காரணமாக கண்டுபிடித்தார் என்பதை இந்திய தூதரக அதிகாரிகள் தெரிந்திருந்தார்கள். ‘இந்திய பயணத்தை ஒத்திவைக்க இரா.சம்பந்தன் சொன்ன காரணம் ’சிறிய’ தாக தோன்றலாம். ஆனால் அவர் ஒரு முக்கிய காரணத்தினாலேயே அதை ஒத்திவைத்திருக்கிறார். இந்தய – இலங்கை ஒப்பந்த காலத்திலிருந்தே 13வது திருத்தத்தை ஏற்காதவர் சம்பந்தன். அது தீர்வல்ல என்பது அவரது நிலைப்பாடு. இந்தியாவிற்கு அழைத்து இம்முறை கூட்டமைப்பு தவிர்த்தது.
ஆனால், கடந்த சில வருடங்களாக நாம் நுணுக்கமாக இந்திய பயணத்தை தவிர்த்து வருகிறோம். மோடியுடன் சந்திப்பிற்கு நேரமொதுக்குங்கள் என இலங்கை வரும் இந்திய பிரதிநிதிகளை நாம் கேட்பதாக செய்திகள் வரும். ஆனால், அந்த சந்திப்பு உருவாகாமல் பார்த்துக் கொண்டோம் என்பதுதான் உண்மை.
அதற்கு காரணமுண்டு. கடந்த ஆட்சியில் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கி விடலாமென நம்பினோம். அதற்காக உழைத்தோம். இப்பொழுதும் அப்படித்தான். வெளியில் சொல்ல முடியாத சில விடயங்கள் உள்ளன. புதிய ஆட்சியாளர்கள் எமக்கு ஒரு உத்தரவாதம் தந்துள்ளனர்.
அதன்படி, பிரிக்க முடியாத நாட்டிற்குள்- சமஷ்டி அடிப்படையிலான தீர்வை எதிர்பார்த்துள்ளோம். கடந்த ஆட்சியிலும் இதையே எதிர்பார்த்தோம். இப்படியான நிலைமையில், நாம் இந்தியாவிற்கு சென்று, நரேந்திர மோடியிடம் 13வது திருத்தத்திற்கு உத்தரவாதம் கொடுத்தால், அரசியல் தவறாகி விடாதா?மோடியிடம் 13வது திருத்தத்திற்கு உடன்பட்டு விட்டு, பின்னர் இலங்கை வந்து, சமஷ்டி தீர்வை கேட்க முடியுமா? மோடியிடம் நாம் சம்மதம் தெரிவித்த 13வது திருத்தத்தை உடனே அமுலாக்கி விடுகிறோம் என இலங்கை சொல்லும் அல்லவா?’ என நீண்ட விளக்கமளித்தார்.
அதாவது, ரணில்- மைத்திரி அரசு தீர்வு தரும் என கூட்டமைப்பின் தலைமை நம்பியதால், இந்திய பயணத்தை தவிர்த்து வந்துள்ளனர்.
ஆனால், அப்படியொரு தீர்வு வருமென கூட்டமைப்பை தவிர்ந்த வேறு யாரும் நம்பவேயில்லை. இப்பொழுது, கோட்டா அரசு தீர்வை தருமென கூட்டமைப்பு தலைமை நம்புகிறது.
அதனால் இந்திய பயணத்தை தவிர்த்துள்ளது. அப்படியொரு தீர்வு வருமென நீங்கள் யாராவது நம்புகிறீர்களா? 13வது திருத்தத்திற்கு உடன்பட கூடாதென்பதாலேயே மோடியை சந்திப்பதை தவிர்த்தவர் சம்பந்தன்.