பிரித்தானிய சிறையில் தற்கொலை செய்து கொண்ட கேதீஸ்வரன்: முழு அறிக்கையும் வெளியானது !
10 Feb,2022
லண்டனில் உள்ள வேம் வுட் ஸ்கிரப் சிறைச் சாலையில், இந்த மரணம் 2வது மரணம் ஆகும். ஈழத்தை சேர்ந்த கேதீஸ்வரன் என்பவர் தனது செல்லில் இறந்து கிடந்துள்ளார். அவர் பல நாட்களாக உணவை உண்ணவில்லை என்றும். ஆனால் சிறை அதிகாரிகள் அது தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இது போக கேதீஸ்வரனது அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு நிலையில் தான் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் அவர் இறக்க முன்னரே அவருக்கான விசாவை, ஹோம் ஆபீஸ் வழங்கி விட்டது. இந்த நல்ல செய்தியைக் கூட, சிறைச் சாலை அதிகாரிகள் அவரிடம் தெரிவிக்கவில்லையாம். அப்படி அவர் அதனை அறிந்திருந்தால் இந்த முடிவை எட்டி இருக்க மாட்டார் என்று, தற்போது விசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளதுஸ ஒழுங்காக ஈமெயிலைக் கூடஸ
செக் பண்ணுவது கிடையாது, சரியாக போன் காலை ஆன்சர் செய்வது இல்லை என்று சிறை அதிகாரிகள் மீது ஏகப்பட்ட புகார்களை விசாரணைக் கமிஷன் சுமத்தியுள்ளது. இன் நிலையில் சிறைச்சாலை நிர்வாகம் தாம் ஆள் பற்றாக்குறை காரணமாக ஏஜன்சி மூலம் சில நபர்களை எடுத்து சிறை அதிகாரிகளாக போட்டுள்ளதாகவும். அவர்கள் சரியான பயிற்ச்சி பெற்ற சிறை அதிகாரிகள் அல்ல என்றும் கூறி தப்ப முனைந்துள்ளது. இந்த தற்கொலை சம்பவம் கடந்த 2018ம் ஆண்டு நடந்தது பலருக்கு நினைவிருக்கலாம். தற்போது தான் விசாரணையின் முடிவுகள் வெளியாகியுள்ளது.