ராஜபக்சக்களிடம் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது!
24 Jan,2022
ராஜபக்சக்களிடத்தில் இனியும் நீதி, நியாயத்தினை எதிர்பார்க்க முடியாது என்றும், உடனடியாக சர்வதேசத்தின் தலையீட்டைக் கோரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் புரையோடிப்போயிருக்கும் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதை தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களையும் கையாள முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகற்கனவு கண்டுகொண்டிருக்கின்றார் என்றும் அவர் பகிரங்கமாக சாடியுள்ளார்
மேலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையினால்தான் போர் இடம்பெற்றது என்பதை ஜனாதிபதி மறந்து விடக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் போரின் காரணமாகவும் அக்காலத்தில் ஆயுதக் கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் காரணமாகவுமே நாடு மீள முடியாத பொருளாதார வீழ்ச்சிக்குள் சென்றுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.