இலங்கைப் பெண்களை குறி வைக்கும் சீனப்பிரஜைகள்-
30 Dec,2021
இலங்கையில் திட்டங்களை செயற்படுத்துவதற்காக வந்துள்ள சீனப் பிரஜைகள் இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்த காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கடத்திச் செல்லப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பத்து இலங்கைச் சிறுமிகள் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்புத் தலைவர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அழகான இளம் பெண்களைத் தேர்வு செய்து திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு விடுதிகளில் பணியமர்த்துவதும் தெரியவந்துள்ளது.
சிறிலங்கா தொடர்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சேதன பசளை இறக்குமதி தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாக்கியுள்ள சீன உர நிறுவனம் இலங்கை மீதான அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளது.
நாடு பெரும் பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வரும் நிலையில், குறித்த சீன நிறுவனம் இலங்கையிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே சீனாவின் Seawin Biotech நிறுவனத்திற்கு உர இறக்குமதி குறித்தான முரண்பாட்டை தொடர்ந்து 6.7 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்கத் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினை ஈடு செய்யும் நோக்கில் இலங்கைக்கு எதிராக சீன நிறுவனம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
இலங்கைக்கு பொருட்களை அனுப்பி வைக்க முன்னதாக அவற்றுக்கான பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு சீன நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறும் கோரிக்க விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.