தமிழர் பகுதியில் தொடரும் மர்ம மரணங்கள்! அடித்துக் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்
19 Dec,2021
கிளிநொச்சி காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட சாந்திபுரம் பகுதயில் நான்கு பேர் கொண்ட கும்பலினால் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அதேயிடத்தைச் சேர்ந்த காளிதாஸ் நாகேந்திரகுமார் (வயது 53) என்பவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டின் முன்பக்கக் கதவினை (கேற்) உடைத்துக் கொண்டு உள் நுழைந்து கணவரைத் தாக்கியுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
தலையில் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்தள்ளார்.
குறித்த கும்பல் கணவரின் தலைப்பகுதியில் கடுமையாக தாக்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவானிடம் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.