நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை துறக்க தயாராகும் இரா.சம்பந்தன்?
                  
                     19 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
	 
	மருத்துவர்களின் ஆலோசனைகளிற்கு அமையவே அவர் இந்த தீர்மானங்களை எடுத்துத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
	 
	எனினும் தற்போது வரையில் அது பேச்சுமட்டத்திலேயே காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
	 
	இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்தாலும், கூட்டமைப்பின் தலைவராக அவர் தொடர்ந்தும் நீடிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
	 
	இதேவேளை, இரா.சம்பந்தனின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு யார் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது