தாயகத்தில் தமிழ் பேச மறுக்கும் உயரதிகாரிகள்!! சிறிதரன் நெற்றியடி
                  
                     14 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் இன்று கூட்டிய கூட்டத்தில் தமிழ் மொழிக்கு இடம் வழங்கப்படாததால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் (Sivagnanam Shritharan) கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
	 
	வடக்கு மாகாணத்தின் நிலமைகள் தொடர்பில் ஆராய ஆளுநரால் கூட்டப்பட்ட கூட்டம் கைதடியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
	 
	இதில் கலந்துகொண்ட ஆளுநர், பிரதம செயலாளர், அதிகாரிகள் என அனைவருமே ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றிய சமயம், தமிழில் உரையாற்றாத சந்தர்ப்பத்தில் அதற்கான தமிழ் மொழி பெயர்ப்பை வழங்குமாறு சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.
	 
	அவரின் கோரிக்கைக்கு பலன் கிட்டாது தொடர்ந்தும் ஆங்கிலத்தில் மட்டுமே உரையாடல் நீடித்தது.
	 
	இதனால் விரக்தி அடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் மொழிக்கு இடம் இல்லாதபோது இந்தக் கூட்டத்தில் நான் எதற்காக பங்குகொள்ள வேண்டும் எனக் கூறிக்கொண்டு வெளியேறியுள்ளார்