இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் மற்றுமொரு ஐரோப்பிய நாடு
                  
                     09 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நிறுத்தப்பட்ட இலங்கை மற்றும் போலந்து நாட்டிற்கு இடையிலான விமான சேவை மீள  ஆரம்பிக்கப்படவுள்ளது.
	 
	 
	இன்று முதல் இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
	 
	அதற்கமைய, லோட் பொலிஷ் விமான நிறுவனத்தினால் திங்கட்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் விமான பயணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
	 
	சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இலங்கை போலந்து தூதுவருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் உறுதியாகியுள்ளது.
	 
	ஏற்கனவே பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ரஷ்யா உட்பட பல நாடுகள் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.