சிறிலங்காவில் தமிழர்கள் மீதான அடக்குமுறை - நோர்வே தூதருடன் முக்கிய பேச்சு
                  
                     09 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	சிறிலங்கா அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்படும் அடக்கு முறைகள் தொடர்பில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் எஸ்கடெல்லுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
	 
	கொழும்பில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
	 
	தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
	 
	இதன்போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், எதிர்கால நடவடிக்கைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரம் ஐ.பி.சி. தமிழுக்கு தெரிவித்தார்.