யாழ்ப்பாண இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கைது
                  
                     05 Dec,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை இளைஞன் ஒருவர் (ஜன. 04) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லைக் கண்காணிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
	 
	அவர் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 36 வயதுடையவர்.
	 
	ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நோக்கிச் செல்லும் EK-649 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக அவர் அதிகாலை 02.55 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது நடத்தையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள எல்லையில் உள்ள எமிரேட்ஸ் விமான சேவை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரிடமிருந்த கனேடிய வீசா உட்பட ஏனைய ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைத்தனர்.
	 
	அதிகாரிகள் நடத்திய தொழில்நுட்ப சோதனையில் விசா முழுமையாக போலியான ஆவணம் என்பது தெரியவந்தது. குடிவரவு குடியகல்வு திணைக்களம் சந்தேக நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளது.