லண்டனில் கோட்டபாய பிசினஸ் பாட்னரோடு மரியட் ஹோட்டலில் உல்லாச சல்லாபம்-
                  
                     28 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	அமெரிக்கா தன்னை அழைக்கிறதுஸ ஆபிரிக்கா கூடாவே பிரித்தானியாவும் என்னை அழைக்கிறது என்று 70M பயாஸ் கோப் படம் காட்டிக் கொண்டு திரிகிறார் சுமந்திரன். ஆனால் உண்மையில் GTF என்று சொல்லப்படும் செயல்பாடு இல்லாத அமைப்பு, தனக்கு தெரிந்த சில அதிகாரிகளை சந்திக்க வைத்து, சுமந்திரனுக்கு உள்ளூர் செல்வாக்கை அதிகரிக்க, திட்டம் தீட்டியுள்ள விடையம் அம்பலமாகியுள்ளது. கடந்த முறை ஸ்ரீ வாத்தியின் கருணையால் விருப்பு வாக்குகளை பெற்று MP பதவியை பிடித்த சுமந்திரனால், அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெற முடியாது. எனவே தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதாக கூறி, இவர் தனது செல்வாக்கை உயர்த்த தீட்டிய திட்டமே இந்த வெளிநாட்டு விஜயம். தற்போது லண்டனில் தங்கி இருக்கும் சுமோ & கோஸ
	 
	 
	 
	கொஸ்-மொஸ் என்று அழைக்கப்படும்(Council of Sri Lankan Muslim OrganisationS UK) முஸ்லீம் கவுன்சிலின் முக்கிய நபர்களை 5* நட்சத்திர ஹோட்டலான மரியட்டில் சந்தித்துள்ளார் இதில் முக்கிய விடையம் என்னவென்றால், கோட்டபாய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பிசினஸ் பாட்னரை, சுமந்திரன் சந்தித்துள்ளார். அவரோடு என்று புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். இதுவும் வெளியாகியுள்ளது. இந்த அமைப்பின் இலட்சினையை பாருங்கள். இதனை வைத்துப் பார்க்கும் போதே இவர்கள் யார் என்பது புரிந்து விடும். வெளிநாட்டில் கோட்டபாயவின் பினாமிகள். இவர்களோடு தான் இரவைக் கழிக்கிறார் சுமந்திரன்.
	 
	இதனை வைத்துப் பார்க்கும் போது, கோட்டாவுடனான நெருக்கம் எங்கே வரை செல்கிறது என்பது தமிழர்களுக்கு நன்றாக புரியும். என்ன தான் உயர உயரப் பறந்தாலும் ஊர் குருவிகள் ஒரு நாளும் பருந்தாகாது.