ஊடகவியலாளரை காட்டுமிராண்டிதனமாக தாக்கிய இராணுவம்!
                  
                     27 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	இராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தளமான தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
	 
	 
	 
	முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் எனும் ஊடகவியலாளர் முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்தபோது, அங்கிருந்த இராணுவத்தினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
	 
	மேலும் அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தியதுடன் , தான் இராணுவ முகாமையோ , இராணுவத்தினரையோ புகைப்படம் எடுக்கவில்லை என கூறிய போதிலும் இராணுவத்தினர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.