கனடாவில் கூட்டமைப்பினர் வெளியேற்றப்பட்டது ஏன்? மாவை வெளியிட்ட தகவல்
                  
                     22 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	கனடாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் விளக்கம் கோரியுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார்.
	 
	இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கனேடிய கிளையிடம் குறித்த சம்பவம் தொடர்புபட்ட விடயங்களை கோரியுள்ளதாக ஐ.பி.சி தமிழுக்கு அவர் கூறியுள்ளார்.
	 
	தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் நேற்று முன்தினம் கனடாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர்.
	 
	இதன்போது அங்கு வருகைதந்த சிலரால் குழப்பம் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
	 
	இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவிடம் ஐ.பி.சி தமிழ் வினவியது.
	 
	இந்தச் சம்பவம் யாரால், ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பது தொடர்பில் கட்சியின் கனடா கிளையின் கருத்தை கோரியுள்ளதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.