சிங்கப்பூர் செல்லும் பயணிகளகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு
16 Nov,2021
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
1ண ஆண்டுகளுக்கு மேலாக இந்த தடை நீடித்தது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
அப்படி வரும் வெளிநாட்டு பயணிகள் 14 நாட்களுக்கு தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்தநிலையில் 94 நாடுகளில் இருந்து இந்தியா வரும் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிங்கப்பூரும் மற்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது.
வருகிற 29-ந் தேதி முதல் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசு இந்த விலக்கு அளித்துள்ளது.
டிசம்பர் முதல் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் இந்த விலக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று சிங்கப்பூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.