சவேந்திர சில்வாவின் தடையை வலியுறுத்தும் பிரித்தானிய எம்.பி!
                  
                     15 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	ஈழத் தமிழர்கள் தொடர்பாக நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
	 
	தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவான சாரா ஜோன்ஸ் என்பவரே இவ்வாறு வலியுறுத்தல் விடுத்துள்ளார்.
	 
	இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 
	 
	சிறிலங்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு(Shavendra Silva) எதிராகத் தடை விதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திடம் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
	 
	தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நீதியும் பொறுப்புக் கோரலும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
	 
	இது தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை தடைசெய்யுங்கள் என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
	 
	மேலும் இந்த விடயத்தை இலங்கை மட்டுமன்றி உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும் என்றும் சாரா ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்