யாழில் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கு அதிகமான குடும்பங்கள் பாதிப்பு!
                  
                     12 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
	 
	சிரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 111 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா மேலும்  தெரிவித்துள்ளார்.
	 
	அத்தோடு தற்போது 4 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 44 குடும்பங்களை சேர்ந்த 153 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறியிடத்தக்கது.