மரணத்தின் பிடியில் இருந்து தப்பித்தார் மலேசிய தமிழர்?
09 Nov,2021
சிங்கப்பூரில் மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு நாளை (10) நிறைவேற்றப்படவிருந்த தூக்குத் தண்டனை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சாங்கி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு கருணை காட்டுமாறு அவரது குடும்பத்தினரும் பல்வேறு தரப்பினரும் சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சிங்கபூர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்மூலம், மரணத்தில் விளிம்பில் இருக்கும் நாகேந்திரனைக் காப்பாற்றுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகள் வெற்றியடைந்துள்ளதாக உள்ளூர் செயற்பாட்டாளரான கிர்ஸ்டன் ஹன் கூறியுள்ளார்.
மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப்பும், தனிப்பட்ட முறையில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு இது குறித்து கடிதம் அனுப்பியிருந்தார் என்பதுடன், இதுவொரு தற்காலிகமான உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது.