மட்டக்களப்பு நகரை முடக்கி மாபெரும் முற்றுகையில் விவசாயிகள்!
                  
                     08 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	மட்டக்களப்பு மாவட்டத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். விவசாயிகள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக நகரம் முற்றாக முடங்கியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
	 
	இந்த முற்றுகைப் போராட்டம் இன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	 
	இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 
	 
	மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் உழவு இயந்திரங்களில் மட்டு நகரத்திற்கு சென்ற விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, நகரத்தையும் முற்றாக முடக்கியுள்ளனர்.
	 
	தங்களது விவசாயத்துக்குத் தேவையான யூரியா உரத்தினை உடனடியாக வழங்க கோரியும் அண்மையில் அமைச்சர் வெளியிட்ட கருத்தை கண்டித்தும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
	 
	பல தடைகளைத் தாண்டியும் பேரணியாக சென்ற விவசாயிகள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர். தங்களது  பிரச்சனைக்கு தீர்வு காணாத பட்சத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.