இலங்கையில்  கடந்த சில மாதங்களில்   சுமார் 1500 பெண்கள் மாயம்!
                  
                     07 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	இலங்கையில் கடந்த சில மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1500 பெண்கள் காணாமற் போனமை பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
	 
	காணாமல் போன பெண்களில் திருமணமானவர்களும் அடங்குவர். சில பெண்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு சென்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
	 
	காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சபுகஸ்கந்த பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் சூட்கேஸில் இருந்து கண்டெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.