BBC தமிழர் போராட்டம் பற்றி செய்தி வெளியிட்டது: 
                  
                     02 Nov,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	அரசியல் தலைவர்கள் பலர் ஏமாற்றுக் காரர்களாக தான் இருக்கிறார்கள் என்ற தலைப்பில், BBC சர்வதேசப் பிரிவு நேற்றைய தினம்(01) செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஈழத் தமிழர்கள் நேற்று கிளாஸ்கோ நகரில் நடத்திய போராட்டம் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. கால நிலை மாற்றம் தொடர்பாக மட்டும் அல்ல, ஏனைய விடையங்களிலும் உலக தலைவர்கள் சரியாக செயல்படவில்லை என்று BBC ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது. நேற்றைய தினம் ஸ்காட் லாந்து தேசத்தில் கிளாஸ்கோ நகரில் பெரும் போராட்டம் ஒன்று தமிழர்களால் நடத்தப்பட்டது. ஆயிரக் கணக்கான தமிழர்கள், கடும் குளிரையும் பொருட் படுத்தாமல் இதில் வந்து கலந்து கொண்டமை பெரு வெற்றியாக பார்கப்படுகிறது