சம்பந்தனை சந்தித்தார் இந்தியத் தூதுவர்! சம்பந்தனை சந்தித்தார் இந்தியத் தூதுவர்! 
                  
                     29 Oct,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெற்றது. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று மாலை 4 மணியளவில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
	 
	    
	இந்தச் சந்திப்பில் தூதரகத்தின் முதலாவது செயலாளர் பானு பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.ஏ.சுமந்திரன்
	 
	ஆகியோரும் கலந்து கொண்டனர்.
	 
	சம்பந்தனுக்குத் தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்தியத் தூதுவர், பல முக்கிய விடயங்கள் குறித்து சம்பந்தனுடன் உரையாடினார்.
	 
	இலங்கைக்கான புதிய அரசமைப்பு, இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை என்பவையும் இதில் அடங்கும். வடக்கு, கிழக்கில் இந்திய முதலீடுகள், உதவித் திட்டங்கள் பற்றியும் இதன்போது பேசப்பட்டன.
	 
	மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவோடு இந்தியத் தூதுவர் சந்திப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.