ஸ்காட் லாந்து பேப்பரில் கோட்டாபாய: என்ன நடந்தது ?
26 Oct,2021
வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி ஸ்காட்லாந்து தேசத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கோட்டபாய ராஜபக்ஷ வருகிறார். இதனை தமிழர்கள் கடுமையாக எதிர்த்து. அங்கே பெரும் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில். ஸ்காட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான, “”த ஹெரால்””” (The Herald) இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார் என்ற செய்தியை முழுப் பக்கத்தில் பிரசுரித்துள்ளது. ஒரு இனத்தின் விடுதலையை நசுக்கிய, இனப் படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார் என்ற சொல் பதமே, ஸ்காட்லாந்து மக்களை மிகவும் யோசிக்க வைக்கும் சொல்லாக உள்ளது. இதனால் நடைபெறவுள்ள தமிழர்களின் போராட்டத்திற்கு ஸ்காட்லாந்து மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. அவர்களும் தமிழர்களோடு இணைந்து அங்கே நிற்க்க பெரும் வாய்ப்புகள் உள்ளது.
“”த ஹெரால்””” பத்திரிகையில் விளம்பரமாகவே இந்த விடையம் போடப்பட்டுள்ளது. எப்படி PR கம்பெனிகளை பாவித்து கோட்டபாய ராஜபக்ஷ தமிழர்களுக்கு எதிராக பல, நகர்வுகளை மேற்கொண்டார் என்பது பலர் அறிந்த விடையம். அது போல தற்போது தமிழர்களும் அதே பாணியில் திருப்பி அடிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது ஒரு புது வரலாறு. இது போக மேலும் பல மட்டங்களில், ராஜதந்திர ரீதியாவும், PR கம்பெனிகள் ஊடாகவும், உச்சி மாநாடு நடக்கும் இடத்தில் பல, முக்கிய காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அவை போராட்ட தினம் அன்றே வெளியாகும். எனவே இந்த போராட்டத்தில் தமிழர்களே அதிக அளவில் கலந்து கொண்டு எமது ஒற்றுமையை நிலை நாட்டுவது அவசியம். இது தமிழர்களின் ஒரு வரலாற்று கடமை ஆகும். ஸ்காட்லான் தேசம், விடுதலை என்ற சொல்லை தமிழர்கள் வாயிலாக கேட்க்க உள்ளது. மீண்டும் ஒரு முறை கேட்க்க உள்ளது.