தலைமைக்கு அஞ்சி மிரண்ட கருணா!! வெளிவரும்  பிளவு: நடந்தது என்ன? (பாகம்1,2,3,4)videos
                  
                     23 Oct,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	2003ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியின் ஒரு சந்தர்ப்பத்தில் தான் வன்னிக்கு வரமாட்டேன் என்று கூறியிருந்தார் கருணா.
	 
	அந்த நேரத்தில் விடுதலைப புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த கருணாவை விடுதலைப் புலிகளின் தலைமை அழைத்தும் கூட அவர் வன்னிக்கு வரமாட்டேன் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
	 
	கருணா அப்படியான முடிவு எடுக்கக் காரணம் என்ன?
	 
	விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிளவு இடம்பெற்ற காலப்பகுதியில் கிழக்கில் பணியாற்றிய சில ஊடகவியலாளர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள், கருணா தரப்பில் செயற்பட்ட சில பிரமுகர்கள் போன்றவர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டு, பிரதி வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் எமது இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்ற ‘உண்மைகள்’ என்ற பெட்டகத் தொடரின் 4ஆம் பாகம் இது