விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் -
10 Oct,2021
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உள்ளார் என வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்து போக்குவரத்துச் சேவைகள், புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்தார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அண்மையில் ஜனாதிபதி அழைப்பு விடுத்த விடயம் தொடர்பில் தனது நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிஷேல் பச்லெட் தவறியுள்ளார். இது தொடர்பில் என்ன நினைக்கின்றீர்கள்?” என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக உள்ளார் என்பது தெளிவாகிறது.
பிரிவினை என்ற நிகழ்ச்சித் திட்டத்திலேயே அவர்கள் தொடர்ந்தும் இருப்பதால் புலம்பெயர்ந்து வாழ் தமிழர்களுடன் மேற்கொள்ளப்படக் கூடிய சாதகமான விடயங்களை அவர்கள் விரும்பவில்லை. உண்மையில் இதில் எதுவும் புதிய விடயம் அல்ல.” என்றார்.