இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரை அழைத்துச் செல்ல முனைந்த அமெரிக்கா!
07 Oct,2021
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், இறுதி யுத்தக் காலத்தில் யுத்தத்தை நிறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சித்ததாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க (S.B.Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இறுதி யுத்தக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்து செல்ல முயற்சித்தார்கள், யுத்தத்தை நிறுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
ஆனால் அதற்கு இலங்கை அரசு அனுமதிக்காமையின் காரணமாகவே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன என்றார்.