தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இலங்கை மந்திரி ராஜினாமா
                  
                     16 Sep,2021
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	 
	இலங்கையில் சிறைச்சாலை துறை அமைச்சராக லொகான் ரத்வத்த இருந்து வந்தார். இவர் அனுராதாபுரம் ஜெயிலை ஆய்வு செய்ய சென்றார். அப்போது தனது ஆதரவாளர் சிலரையும் அவர் அழைத்து சென்றார்.
	 
	 
	இந்த ஜெயிலில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக உரிய விசாரணை இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளனர்.
	 
	லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகள் அறைக்கு சென்று அவர்களை மிரட்டினார். தனது சொந்த துப்பாக்கியை எடுத்துக்காட்டி கொன்று விடுவதாக எச்சரித்தார். மேலும் அவர்களை முழங்காலிட செய்து அவமதித்தார்.
	 
	இந்த சம்பவம் குறித்து இலங்கை தமிழ் தலைவர்கள் டுவிட்டரில் தகவலை வெளியிட்டனர். மேலும் அவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் லொகான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார்.
	 
	இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தற்போது இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த அவர் மந்திரி லொகான் ரத்வத்தேவை தொடர்புகொண்டு பதவி விலகும்படி கூறியதாக தெரிய வந்துள்ளது.