கிளிநொச்சியில் பாழடைந்த கிணற்றில் பாயில் சுற்றிய நிலையில் சடலம் மீட்பு
17 Aug,2021
கிளிநொச்சி இரத்தினபுரம் கிருஷ்ணன் கோவிலடியில் தனியார் காணி ஒன்றில் உள்ள பாழடைந்த கிணற்றில் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் இனம் தெரியாத நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதனை தொடர்ந்து அயலவர்கள் ஆராய்ந்த போதே கிணற்றில் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டுள்ளது.
பயன்பாடற்ற நிலையில் காணப்பட்ட காணியில் உள்ள கிணற்றிலேயே சடலம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த காணி சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாயினால் சுற்றப்பட்ட நிலையில் கிணற்றில் சடலம் காணப்படுவதனால் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.