5 ஆயிரத்தை தாண்டியது கொரோனா மரணங்கள்!
                  
                     08 Aug,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	 
	இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5000 ஐ தாண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மேலும் 98 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவான நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5017ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
	 
	    
	இவ்வாறு உயிரிழந்தவர்களில் 78 ஆண்களும் 20 பெண்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
	 
	அதேவேளை நேற்று மேலும் 2,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
	 
	இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,26,043 உயர்ந்துள்ளது.
	 
	இந்நிலையில், 30,330 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.