24 மணிநேர சேவை வழங்கும் சூப்பர் மார்க்கெட் யாழில் திறந்துவைப்பு
                  
                     06 Aug,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	யாழ்ப்பாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட “தாரணி சூப்பர் மார்க்கெட்” 24 மணி நேர சேவையை ஆரம்பித்துள்ளது.
	 
	வட மாகாணத்திலேயே முதன் முறையாக 24 மணிநேர சேவையை நேற்றிலிருந்து இந்த சூப்பர் மார்க்கெட் வழங்கிவருகிறது.
	 
	இதனை யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.