சுவிட்சர்லாந்தில்  கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த் 12 பேர்!
                  
                     23 Jul,2021
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	 
	சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் பொலிஸார் ரோந்து பணியின் போது 300 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9000 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர். 12 பேரும் 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் ஒரு வருடமாக அந்த கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
	 
	 
	 
	கைதான 12 பேரும் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் பொலிஸார் அவர்கள் மீது புலம்பெயர்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளனர்.அத்துடன் சுமார் 5,500 கஞ்சா செடி நாற்றுக்களையும் எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.