சிறிய துண்டு பாணும் வாழைப்பழமுமே தந்தனர் - உண்மையை உடைத்த ஸ்ராலின்
10 Jul,2021
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் எனத் தெரிவித்து முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்கு கொண்டு சென்ற தமக்கு சிறிய துண்டு பாணும் வாழைப்பழமுமே வழங்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை இணையத்தளமொன்று வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் தெரிவித்தது என கூறி வெளிவந்த விடயங்கள் வருமாறு,
தனிமைப்படுத்தல் விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு பொய் சொல்கின்றார், மக்களை தவறாக வழிநடத்துகின்றார். ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் வாகனத்திற்குள் இழுத்து ஏற்றப்பட்டனர், அவர்களது ஆடைகள் பறிக்கப்பட்டன,சிலாபம் பொலிஸ் நிலையத்தில சிறியதுண்டு பாணும் வாழைப்பழமும் மாத்திரம் வழங்கினார்கள். மாற்றுடைகள் இல்லாததால் பெட்சீட்டை நாங்கள் பயன்படுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு பொலிஸார் மருந்துகளை வழங்கினார்கள் என அமைச்சர் பொய்சொல்கின்றார்- 1500 ரூபாய் என்பதால் இன்ஹேலரை கூட வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.