கணவருடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு
29 Jun,2021
யாழ்ப்பாணத்தில், இன்று (28), தனது கணவருடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர், மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சுன்னாகத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு, தனது கணவனுடன் ஓட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த போது, குறித்த பெண், திடீரென மயக்கமுற்றுள்ளார்.
இதையடுத்த, அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.