வியாழேந்திரன் வீட்டின் முன்னால் இடம்பெற்ற படுகொலை- நடந்தது என்ன?
22 Jun,2021
இராஜாங்க அமைச்சர் வியாழேந்தரனின் பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட நபர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என அவரது நண்பர் நேரடி சாட்சியமாக விபரித்துள்ளார்.
படுகொலை சம்பவம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது,
நானும் பாலேந்திரனும் முச்சக்கரவண்டியில் வீதியால் சென்ற போது நான் யார் என தெரியுமா பொலிஸ் என கூறிக்கொண்டு அவர் துப்பாக்கியை எடுத்ததும் துப்பாக்கி வெடித்தது. எனது நண்பன் கீழே விழுந்தான் என முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்தவரின் நண்பனுமான விஜயராஜா தெரிவித்தார்.
நானும் பாலசுந்தரமும் நண்பர்கள் சம்பவதினமான நேற்று அமைச்சரின் வீடு அமைந்துள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றில் மண் கொடுப்பது தொடர்பாக பேசி விட்டு முச்சக்கரவண்டியில் சென்று திரும்பிவரும் போது அமைச்சரின் வீட்டின் முன்பகுதியிலுள்ள வெற்றுக்காணியிலுள்ள மரம் ஒன்றின் கீழ் குறித்த மெய்பாதுகாவலர் நின்றிருந்தார்.
இதன்போது அவரை கண்டு முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு எனது நண்பன் கோரினான். நான் நிறுத்தாமல் சென்றேன். இருந்த போதும் நண்பன் முச்சக்கரவண்டியை திருப்புமாறும் அவர் கூப்பிடுகின்றார் கதைத்துவிட்டு போவோம் என்றும் தெரிவித்தார்.
அதனையடுத்து நான் முச்சக்கரவண்டியை திருப்பிகொண்டு அமைச்சரின் வீட்டின் முன்னால் வீதியில் நிறுத்தியபோது வீதிக்கு வந்த மெய்பாதுகாவலர், நண்பனிடம் என்னடா கைகாட்டியும் நிற்காமல் சென்றாய் எனஎன கேட்டார். அதற்கு நண்பன் இதைக் கேட்க நீ யார் என்றார்.
அதனையடுத்து இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனையடுத்து மெய்பாதுகாவலர் நண்பனை கழுத்தில் கையை வைத்து தள்ளிக் கொண்டு நான் யாரு என்று தெரியுமா பொலிஸ் என துப்பாக்கியை மெய்பாதுகாவலர் எடுத்ததும் வெடித்தது நண்பன் கீழே விழுந்தான்.
இரத்தம் வெளியே வந்தது அதன் பின்னர் எனது முச்சக்கரண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றேன். அதேவேளை நண்பன் முன்று தினங்களுக்கு முன்னர் மெய்பாதுகாவலர் உடன் பிரச்சனை நடந்திருக்கின்றது. ஆனாலும் எனக்கு அதுபற்றி தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.