அன்ரியுடன் வாட்ஸ்-அப்பில் லீலை!! பல லட்சங்களை இழந்த பிரான்ஸ் இளைஞன்
22 Jun,2021
வவுனியா தமிழ் அன்ரியுடன் வாட்ஸ்-அப்பில் லீலை!! பல லட்சங்களை இழந்த பிரான்ஸ் இளைஞன்
வவுனியாவைச் சேர்ந்த அன்ரி ஒருவரிடம் பல லட்சங்களை பறிகொடுத்த அதிர்ச்சியில் இருக்கின்றார் புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்ற 32 வயதான இளைஞன். தனது உறவுக்காரர் ஒருவர் மூலம், பிரமிட் பண மோசடிக் கும்பல் ஒன்றின் வலையமைப்பில் தொழிற்படும் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவரின் வட்சப் இலக்கத்தை பெற்றுள்ளார் குறித்த இளைஞன். பிரமிட் வலையமைப்பின் இலங்கையின் குளோபல்-லைப் லங்கா என்ற ஒரு போலி நிறுவனத்தில் பிரான்ஸ் இளைஞனையும் குறித்த பெண் அங்கத்தவராக சேர்ந்துள்ளாள்.அதன் பின்னர் பெண்ணும் இளைஞனும் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்குமான தொடர்பு பாலியல் வாட்ஸ் அப் சட்டிங்காக மாறிவிட்டது.
குறித்த வவுனியா அன்ரிக்கு 51 வயது என்றும், 27 வயதில் கலியாணம் கட்டிய மகளும் இருக்கின்றார். இந் நிலையிலேயே இவர்கள் பாலியல் ரீதியில் வட்சப்பில் தொர்பு கொண்டு வந்துள்ளார்கள்.இன் நிலையில் பிரான்ஸ் இளைஞர் தனது சில நிர்வாண படங்களை ஆன்டிக்கு அனுப்பியும் உள்ளார். இனி சொல்லவா வேண்டும் ? இந்த அன்ரி, இந்தப் படங்களை வேறு ஒரு நபரிடம் கொடுத்து. அதனை பிரான்சில் உள்ள இந்த இளைஞருக்கு வேறு ஒரு நம்பரில் இருந்து அனுப்பி. இதனை இணையத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளார்.
படங்களை வெளியிடவேண்டாம் என்று கதறி அழுத பிரான்ஸ் இளைஞர், பல லட்சங்களை அனுப்பியும் உள்ளார். இதில் மெயின் மேட்டர் என்னவென்றால், தனது மோபைல் போன் திருட்டுப் போய் விட்டது. யாரோ எடுத்து அதில் உன் படங்களை பார்த்து உன்னை மிரட்டுகிறார்கள். எனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று வாட்ஸ் அப் வீடியோ காலில் கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்துள்ளார் இந்த அன்ரி. இறுதியில் என்ன தான் நடந்தாலும் நடக்கட்டும் என்று இளைஞர் பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில்.
51 வயது அன்ரி அவரின் கூட்டாளிகள் சேர்ந்து செய்த லீலை தான் இது என்று தெரியவந்துள்ளது. இது போக அவுஸ்திரேலியாவில் ஒரு தமிழரும் இது போல இவர்களிடம் சிக்கி தவித்த விடையமும் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இது 2 பேருடன் முடிந்த கதை அல்ல. முன்னரும் இப்படி நடந்திருக்கும். ஆனால் வெளியே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.