ஆறு நாடுகளில் பரவும் வைரஸ் இலங்கையில் கண்டுபிடிப்பு
09 May,2021
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் வைரஸ் இனங்கள் தொடர்பான தகவல்களை ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி ஆறு நாடுகளில் பரவும் கொவிட் வைரஸ் இனங்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் அடையாளம் காணப்பட்ட B.1.1.7
டென்மார்க்/ஐரோப்பா/மத்திய கிழக்கு நாடுகளில் அடையாளம் காணப்பட்ட B.1.428
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட B.1.411
நைஜீரியாவில் அடையாளம் காணப்பட்ட B.1.525
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட B.1.617
தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட B.1.351