திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் உவர்மலை மற்றும் அன்புவழிபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகள், நேற்று மாலை 6.00 மணி முதல் முடக்கப்பட்டதுடன் குறித்த பகுதியினை வதிவிடமாகக் கொண்டவர்கள் மாத்திரம் உள்நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, இந்தப் பகுதிகள் முடக்கப்படுவதாக முன்னரே அறிவிக்காததால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியனர். நேற்று தொழிலாளார் தின விடுமுறை காரணமாக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததால் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் சிரமம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள்முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்குமாயின் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை இலங்கையிலும் ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது. அந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்கு மக்கள்முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த-
வெள்ளியன்று 1600 இற்கும் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்தியாவில் தற்போதுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டு முன்னாயதங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த நிலைமையை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும். ஆனால் அங்குள்ள நிலைமையைப் போன்று ஏற்படக் கூடிய அபாயமும் உண்டு.
எனவே தொற்றுக்கான ஏதேனுமொரு அறிகுறி காணப்படுபவர்கள் அவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்காமல் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எனினும் ஏதேனுமொரு வகையில் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்குமானால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது.
எனவே இந்த அபாயத்தை தவிர்த்துக் கொள்வதற்காக மக்கள் அவர்கள் சார்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது மிக முக்கியத்துவமுடையதாகும். வெள்ளியன்று 11 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இலங்கைக்குள்ளும் கொவிட் பரவலானது மிகத் தீவிரமாக அதிகரித்து வருவது தெளிவாகிறது.
தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் கடந்த நாட்களில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றவர்கள் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலை ஏற்படுமாயின் ஒரு தடுப்பூசியையேனும் வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலக சுகதார ஸ்தாபனம் ஆலோசனை வழங்கியுள்ளது என்றார்.