இலங்கை! தமிழர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்

25 Apr,2021
 

 
 
மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது.
 
இது ஒரு துரதிஸ்டமான நிலைமை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
 
இன்று ஞாயிற்றுக்கிழமை பதுளை ரிவ சைட் விருந்தகத்தில் நடைபெற்ற மலையக மக்கள் முன்னணியின் மறுசீரமைப்புக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் பேசிய அவர்,
 
இன்று இலங்கை என்ற அழகிய தீவு ஒவ்வொரு நாட்டிற்கும் துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் அன்று பெரும்பான்மை சமூகத்தால், மலையக மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதியாகும்.
 
இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தால் பொது மக்கள் பலர் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதே போல 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தின் பொழுது மலையக மக்கள் அனைத்து இடங்களிலும் பாதிக்கப்பட்டார்கள். அன்று அந்த விடயங்களை நினைத்துப் பார்த்தும் ஒரு சில பெரும்பான்மை சமூகத்தினர் சந்தோசப்பட்டார்கள்.
 
இந்த நாடு தமிழர்களுக்கு சொந்தமில்லை. இது தனியே பெரும்பான்மை மக்களுக்கான நாடு என்று பிரசாரம் செய்தார்கள். ஆனால் இன்று இலங்கையின் நிலை என்ன? பல நாடுகள் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விலைபேசி வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்கு காரணம் பெரும்பான்மை சமூகம் இந்த நாட்டில் இருக்கின்ற அனைவரையும் இந்த நாட்டின் பிரஜைகளாக நினைக்கவில்லை.
 
தனியே இந்த நாடு பெரும்பான்மை மக்களுக்கு சொந்தமான நாடு எனக் கூறுகின்றார்கள். இந்த நிலைமை தொடருமானால் இன்னும் ஒரு சில வருடங்களில் இலங்கையில் பல தீவுகள் உருவாகலாம்.
 
அதன் முதலாவது தீவாக தற்பொழுது கொழும்பில் அமைக்கப்பட்டு வருகின்ற போட் சிடி என்று சொல்லப்படுகின்ற அபிவிருத்தி சீனாவின் தீவாக மாறிவிடும். இப்படி பல தீவுகள் இங்கே உருவாகி இலங்கை என்ற ஒரு நாடு இல்லாமல் போய்விடும்.
 
எனவே இந்த நாட்டை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும். அப்படி ஒன்றுபடாவிட்டால் ஆண்டவன் கூட இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.
 
எனவே இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகம் - தமிழர்கள், முஸ்லிம்கள் ஏனையவர்களையும் தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக கருத வேண்டும். அப்படிச் செய்தால் நிச்சயமாக இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.
 
இல்லாவிட்டால் சீனா புகுந்த நாடும் ஆமை புகுந்த வீடும் என்றுமே உருவப்படாது - என்பது தான் உண்மை. எனவே இதனைப் புரிந்து இந்த அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies