வட தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அழைப்பு!
24 Apr,2021
வடமாகாண தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.
பொலிஸ் சேவைக்கான ஆளணியை அதிகரிப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செயலமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனூடாக வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகளை தமிழில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டுக்குள் மேலும் 24,000 பேர் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவர்.
தமிழ் மொழி பேசுபவர்களை அவர்களது சொந்த மாவட்டங்களில் கடமையாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.