மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!
09 Apr,2021
யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.
யாழ். மாநகர சபையினால் மாநகர காவல் படை அமைத்தமை மற்றும் அதன் சீருடை தொடர்பாக மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
அத்துடன், இந்தக் கைது நடவடிக்கையானது இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசமானது நிலையான பாதையில் தவிர்க்க முடியாதளவில் உயரத்தை எட்டியுள்ளதாக என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை முதல்வரும், சட்டத் தரணியுமான மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இதையடுத்து. இன்று மதியம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா போது வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச்செல்லப்பட்டார்.
அத்துடன், பரிசோதனைகளின் பின்னர் கண்டி விதீயில் அமைந்துள்ள பயங்கரவாரதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிற்கு மீண்டும் மணிவண்ணன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.