ஜெனிவா தீர்மான வாக்கெடுப்பு நாளை வரை ஒத்திவைப்பு!
22 Mar,2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீது இன்று நடக்கவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீது இன்று நடக்கவிருந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் தற்பொழுது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது.
எனினும் நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளினால் இந்த வாக்கெடுப்பு நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது இலங்கைக்கு எதிராக பல நாடுகள் வாக்களிக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் கிரமமாக்கப்பட வேண்டுமெனவும், மனித உரிமை நிலைமைகள் கண்காணிக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.