நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே 234 தொகுதிகளில் போட்டி
07 Mar,2021
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தலுக்கு முன் இரண்டு விஷயங்கள் கூறியிருந்த நிலையில், அதில் ஒன்றை சொன்ன படி செய்து விட்டார், மற்றொன்று இன்று தெரிந்துவிடும். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து கொண்டு வருகின்றன.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனித்தே 234 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. தேர்தலுக்கு முன், இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு விஷயங்கள் கூறினார், அதில் ஒன்று 234 தொகுதிகளில் பாதிக்கு பாதி பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்படும், அதாவது 50 சதவீதம் ஆண்களுக்கு, 50 சதவீதம் பெண்களுக்கு சம உரிமை என்று கூறினார்.
அதே போன்று 117 தொகுதிகளில் பெண்கள் இந்த சட்டமன்ற தேர்தலில் நிற்கின்றனர். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. இதற்கான விழா சென்னையில் இன்று நடைபெறவுள்ளது.
இரண்டாவதாக, திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் போட்டியிடுவேன் என்று கூறினார். இன்று அறிவிப்பு வெளியாகவுள்ளதால், இதில் சீமான் போட்டியிடும் தொகுதி தெரிந்துவிடும் என்பதால், இதிலும் அண்ணன் சொன்னது போன்று செய்துகாட்டிவிடுவார், நிச்சயம் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவார் என்று சீமானின் தொண்டர்கள் நம்புகின்றனர்.