ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சர் அளித்த பதில் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சர்வதேச குற்றங்களை மறுப்பதாகவும் பொறுப்புக்கூறலை நிராகரிப்பதாகவும் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை திட்டமிட்ட பிரசாரம் என கூறி நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார் என்பதை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இதைக்கேட்ட பின்னரும் நீதியை பின்தொடர்வதற்கான நோக்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது என்று எவராலும் நம்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, சர்வதேச பொறுப்புக்கூறல் தற்போது அவசியமாகியுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் பிஷர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனடா வெளியிட்ட அறிக்கை:
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனடா
வெளியிட்ட அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உயர் ஆணையாளர் சமர்ப்பித்த இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் றொப் ஒலிஃபண்ட், (Rob Oliphant) பின்வரும் கருத்தை வெளியிட்டார்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனடா வெளியிட்ட அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உயர் ஆணையாளர் சமர்ப்பித்த இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் றொப் ஒலிஃபண்ட், (Rob Oliphant) பின்வரும் கருத்தை வெளியிட்டார்.
“உயர் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையைக் கனடா வரவேற்கிறது. 30ஃ1 தீர்மானத்திற்கான ஆதரவை மீளப் பெறும் இலங்கை அரசின் முடிவு எமக்கு வருத்தமளிக்கிறது. மீளிணக்கம், பொறுப்புக் கூறல் ஆகியவற்றுக்கான உள்நாட்டு நடைமுறைகள் தொடர்ந்தும் பயனளிக்கத் தவறிவருகின்றன. தப்பிப்பிழைத்தோர், உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உறுதியாக இருப்பதுடன், அசாத்தியமான ஆபத்துக்களின் மத்தியிலும் சான்றுகளை வழங்க முன்வந்துள்ளார்கள்.
அவர்களது தாங்குசக்தியையும், துணிவையும் நாம் கண்டுணர்கிறோம். மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்த உயர் ஆணையாளரின் கவலை எமக்கும் உள்ளது. துரதிஷ்டவசமாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இது வன்முறைக்கும், மோதலுக்கும் மீண்டும் வழிவகுக்கலாமென்பது வருத்தத்திற்குரியது. குடிசார் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை, குடிசார் சமூக செயற்பாட்டுக்கான வெளி, மனித உரிமைகளுக்;கான மதிப்பு, ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகிய அனைத்தும் வலுவிழக்கச் செய்யப்படுகின்றன.
முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது, தமிழர்களின் நினைவேந்தல்கள் மீதான கட்டுப்பாடுகள் என்பன நாட்டில் பிளவுகளை மேலும் அதிகரிக்கும். இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதும், மீளிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதும் பேரவைக்குள்ள கடமையெனக் கனடா நம்புகிறது
ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியானது!
தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களுக்குச் சிறந்தது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளிட்ட அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்கிறோம் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.
தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களுக்குச் சிறந்தது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளிட்ட அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்கிறோம் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.
இலங்கையுடன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் அயலான் என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விடயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.
எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.
இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு சமத்துவம், நீதி, அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளது. இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.
எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.
நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையை கேட்டுக்கொள்கிறோம். என்றார்.
நீதியைப் பெற்றுக் கொடுக்காவிடின் மாற்று வழியை நாட நேரிடும்!
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதி
யைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இலங்கைக்கு உள்ளது எனத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ், இதனை அரசாங்கம் செய்யவில்லை என்றால் மாற்று வழிகள் தொடர்பில் ஆராய வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதி யைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இலங்கைக்கு உள்ளது எனத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ், இதனை அரசாங்கம் செய்யவில்லை என்றால் மாற்று வழிகள் தொடர்பில் ஆராய வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதிநிதிகளை நேற்றுக் காலை தனியார் விடுதி ஒன்றில் சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் மனித உரிமைகள் பேணப்படுவதிலும், அவை மீறப்பட்ட மையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலும் அதிக கரிசனை காட்டிவரும் நாடு அமெரிக்கா. அதனால்தான் இந்த விடயத்தில் நாம் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றோம். போர்க் காலத்தில் யுத்தக் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல், மனிதாபிமானத்துக்கு விரோதமான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் நீதி வேண்டி காத்து நிற்கின்ற னர். இலங்கை இறைமையுள்ள, ஜனநாயக நாடு. தனது மக்களுக்கு இழைக்கப் பட்ட கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இலங்கைக்கு உள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றால் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும். ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இது குறித்துத்தான் ஆராயப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என பன்னிரண்டு ஆண்டு களாக காத்திருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோ ரின் உறவுகள் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறியாது பன்னி ரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கின்றார்கள்.
அத்தகையோரின் மனநிலை எத்தகையது என்பது புரிகின்றது. நிலைமை இப்படியே நீடித்துச் செல்ல முடியாது. இனியும் நீதி தாமதிக்கப்பட முடியாது. மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் கடப்பாடு அமெ ரிக்கா உட்பட ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது. இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக விசா ரணைகளை நடத்தி, உண்மைகளைக் கண்டறிந்து, பொறுப்புக்கூறலை நிலை நாட்டி, இழப்பீடுகளை வழங்கி, மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகை யிலான தீர்வுகளைக் கண்டறிய வழிசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகின் றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதற்கான முயற்சிதான் முன்னெடுக்கப்படுகின்றது. தனது கடப்பாட்டை நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு. அதனைத்தான் நாமும் வலியுறுத்தி நிற்கின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும்அதற்கான முயற்சிகளைத்தான் முன்னெ டுக்கின்றது. தமது பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ளா விட்டால், மாற்று வழிகளைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் சர்வதேசத்துக்கு ஏற்பட லாம். அந்தக் கட்டாயம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் ஏற்படும்.
மனித உரிமைகளை நிலை நிறுத்துவதில் பங்களிக்க ஜனாதிபதி ஜோ பைட னின் அமெரிக்க அரசாங்கம் விரும்புகின்றது. அதனால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அதிக பங்களிப்பை எதிர்காலத்தில் வழங்குவதற்கு முன்னிற்கும் என்றார்