சட்ட நடவடிக்கையை சந்திக்கத் தயார்! - சரத்துக்கு விக்கி சவால்.
11 Feb,2021
அமைச்சர் சரத் வீரசேகர தன்மீது சட்ட நடவடிக்கையை எடுக்கட்டும், நீதிமன்றில் சந்திக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்ற ஊடகச் சந்திப்பில், ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சரத் வீரசேகர சட்ட நடவடிக்கை எடுத்தால் தான் அதை வரவேற்பதாகவும், இதன்மூலம் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவரக் கூடிய ஒரு சந்தர்ப்பம் தங்களுக்கு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏனென்றால், தான் இதுவரையில் எடுத்திருக்கும் அத்தனை நடவடிக்கைகளும் ஜனநாயகத்திற்கு உட்பட்டவையே எனவும், வெறுமனே அவர்கள் நினைத்ததுபோன்று தங்களைக் குற்றஞ்சாட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சட்ட நடவடிக்கையை கட்டாயமாக எடுக்கட்டும் நீதிமன்றத்திலே அவற்றைச் சந்திப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.